Thursday, October 17, 2019

மலேசியா சங்கப் பதிவாளர் (ROS)-கீழ் இந்து சமய இயக்கங்களின் பதிவு குறிப்புகள்

1.(ROS)-கீழ் பதிவு அனுமதி/அங்கீகாரம் வழங்கப்பட்ட இரண்டு (2) வகை இந்து சமய இயக்கங்கள்:-

1.1Persatuan Penganut;

மற்றும்

1.2Jawatankuasa Pengurusan

2.இந்த “Persatuan Penganut” மற்றும் “Jawatankuasa Pengurusan” இடையிலான வேறுபாடுகள்:-

2.1Persatuan Penganut

2.1.1யாரேனும் பதிவு விண்ணப்பம் செய்யலாம்.

2.2 Jawatankuasa Pengurusan

2.2.1ஆலயம் அமைந்திருக்கும் நிலம் ஆலயத்தின்/இயக்கத்தின் பெயரில் பதிவு பெற்றிருக்க வேண்டும்;

அல்லது

2.2.2நகராண்மைக் கழகத்தின் (Pihak Berkuasa Tempatan/PBT) அனுமதி கடிதம் பெற்றிருக்க வேண்டும்.

மற்றும்/அல்லது

2.2.3மாவட்ட மற்றும் நில அலுவலகத்தின் (Pejabat Daerah & Tanah/PDT) அனுமதி கடிதம் பெற்றிருக்க வேண்டும்.

3.இந்து சமய இயக்கங்கள் (ROS)-கீழ் பதிவு  பெறுவதன் அவசியம்:-

3.1ஆலயம் மற்றும் சமயம் சார்ந்த நடவடிக்கைகளை முறையாக நிர்வாகம்  புரிய;

3.2ஆலயம்  அமைக்க அல்லது ஆலயம் அமைந்துள்ள நிலத்தை விண்ணப்பம் செய்ய;

3.3ஆலயங்கள் முறையாக அரசிதழ் (gazette) முறையே பதிவு பெற;

3.4வங்கி கணக்கு திறக்க;

3.5அரசு மற்றும் தனியாரிடம் மானியம்/நன்கொடை விண்ணப்பம் செய்ய;

3.6உள்நாட்டு வருவாய் ஆணையத்தின் (Lembaga Hasil Dalam Negeri/LHDN) நன்கொடையாளர் வரி விலக்கு விண்ணப்பம் செய்ய;

3.7ஆலய திருவிழா/தேர் ஊர்வலம் நடத்த காவல் துறையின் அனுமதி (permit) விண்ணப்பம் செய்ய;

3.8மலேசியா இந்து சங்கத்தின் உறுப்பினர் விண்ணப்பம் செய்ய;

3.9மற்றும் பல.

4.பதிவு பெற்ற இந்து சமய இயக்கங்களை (ROS) ரத்து செய்வதன் காரணம்:-

4.1பதிவு செய்யப்பட்ட முகவரியை தவிர்த்து வேறு முகவரியில் நிர்வாகம்/நடவடிக்கையை மேற்கொள்வது;

4.2இயக்கத்தின் சட்ட விதியில் (Perlembagaan) குறிக்கப்பட்ட நோக்கத்திற்கு மாறாக செயல்படுவது;

4.3இயக்கத்தின் சட்ட விதியை மீறி செயலவை உறுப்பினர் (AJK) நியமிப்பு;

4.4இயக்கத்தின் சட்ட விதியை மீறி உறுப்பினர் சேர்ப்பு;

4.5செயலவை உறுப்பினர்களின் (AJK) தேர்வு மற்றும் நியமனம் இயக்கத்தின் உறுப்பினர்களால் ஆண்டு பொதுக்கூட்டத்தில் வாக்கு/தேர்தல் மூலம்  நியமிக்கப்படுவதில்லை;

4.6இயக்கத்தின் சட்ட விதியை மீறி உறுப்பினர் கட்டணம் வசூலிப்பது;

4.7சில குறிப்பிட்ட தொகையின் செலவுகள் ஆண்டு பொதுக்கூட்டத்தின் (Mesyuarat Agung Tahunan) ஒப்புதலின்றி செலவிடப்படுவது;

4.8நிதி முறைகேடு;

4.9ஒரு வருடத்தில் நடத்தப்பட வேண்டிய கட்டாய செயலவை கூட்டத்தின் (Mesyuarat Jawatankuasa) எண்ணிக்கை இயக்கத்தின் சட்ட விதியை பின்பற்றுவதில்லை;

4.10செயலவை கூட்டத்தின் சந்திப்பு அழைப்பு அறிவிப்பு (Notis Panggilan Mesyuarat) இயக்கத்தின் சட்ட விதியை பின்பற்றி முறையான கால வரம்பில் செயலவை உறுப்பினர்களுக்கு வழங்குவதில்லை;

4.11இரண்டு (2) தணிக்கையாளர்களை ஆண்டு பொதுக்கூட்டத்தில் நியமிக்கப்படுவதில்லை/நியமிக்க தவறுவது;

4.12இயக்கத்தின் சட்ட விதியில் இயக்கங்கள் (Persatuan Penganut)  ஆலயங்களை நிர்வகிக்க கூடாது என்ற தடை இருந்தும் அந்த தடையை மீறி இயக்கங்கள் ஆலயங்களை நிர்வகிப்பது;

4.13இயக்கங்கள் பதிவு பெறாத சின்னங்களை பயன்படுத்துவது;

4.14மற்றும் பல.

5.(ROS)-ஆல் பதிவு ரத்து செய்யப்படும் இயக்கங்களின் விளைவுகள்:-

5.1இயக்கங்கள் நடவடிக்கைகளை மேட்கொள்ள இயலாது;

5.2இயக்கத்தின் பெயரில் பதிவு பெற்ற அசையும் மற்றும் அசையா சொத்துக்களை மலேசியா திவால் துறையிடம் (Jabatan Insolvensi Malaysia) ஒப்படைக்க நேரிடும்;

5.3இயக்கத்தின் அணைத்து அசையும் மற்றும் அசையா சொத்துக்களை மலேசியா திவால் துறை (Jabatan Insolvensi Malaysia) எடுத்து நிர்வகிக்கும்;

5.4செயலவை உறுப்பினர்ககளின் (AJK) அனைவரது பெயரும் (ROS)-ஆல் கருப்பு பட்டியல் இடப்படுவர்.

6.(ROS)-ஆல் பதிவு ரத்து செய்யப்படும் இயக்கங்களின் சட்ட உரிமைகள்:-

6.1(ROS)-இன் இயக்கப் பதிவு ரத்து ஆணை பிறப்பிக்கப்பட்ட தேதியிலுருந்து முப்பது (30) நாட்களுக்குள் உள்துறை அமைச்சரிடம் (Menteri Dalam Negeri) மேல்முறையீடு மனு செய்யலாம்;

அல்லது

6.2(ROS)-இன் இயக்கப் பதிவு ரத்து ஆணையை எதிர்த்து ஆணை பிறப்பிக்கப்பட்ட தேதியிலுருந்து மூன்று (3) மாதங்களுக்குள் உயர் நிதிமன்றத்தில் (Mahkamah Tinggi) நீதித்துறை மறு ஆய்வுக் (Semakan Kehakiman) கோரி மனு தாக்கல் செய்யலாம்.

எழுத்து:-
அழகேந்திரா ரமணி

No comments: