Thursday, August 27, 2020

மலேசியா: ஆலயங்கள் அகற்றப்படும் காரணமும் அதனை மேட்கொள்ளும் வழிமுறையும்.

1.

நமது இனம், மொழி, சமயம் மற்றும் கலாச்சாரம் வளர அடித்தளமாக திகழ்வது ஆலயம்.

2.

ஆனால் இன்று மலேசியாவில் உள்ள அணைத்து ஆலயங்களும்; ஆலயங்களுக்கு சொந்தமான நிலங்களில் அமைக்கப்பட்டுள்ளதா?

3.

மலேசியாவில் உள்ள பெரும்பாலான ஆலயங்கள்; ஆலயங்களுக்கு சொந்தமான நிலத்தில் அமையவில்லை.

4.

இது ஏனெனில், மலேசியாவில் உள்ள பெரும்பாலான ஆலயங்கள் பல நூற்றாண்டுகள் பழமையானவை மற்றும் சுதந்திரத்திற்கு முன்பே கட்டப்பட்டவையாகும்.

5.

தோட்டப்புறங்களில் அமைத்துள்ள பெரும்பாலான பழமை வாய்ந்த ஆலயங்கள் காலனித்துவ காலத்தில் தோட்ட உரிமையாளர்களின் அனுமதியுடன் அமைக்கப்பட்டவையாகும்.

6.

மேம்பாட்டு வளர்ச்சியின் காரணமாக தோட்டங்கள் துண்டாடப்பட்டு உரிமம் பரிமாற்றம் பெரும்பொழுது ஆலயம் அமைத்திருக்கும் நிலங்களின் உரிமம் தனியார் அல்லது அரசு பெயருக்கு பரிமாற்றப்படுகிறது.

7.

மாநில அரசும் மற்றும் தேசிய நிலக் குறியீடு பிரிவு 214A-ன் கீழ் (Section 214A of National Land Code) நிறுவப்பட்ட தோட்ட நில வாரியமும் தோட்ட நிலங்களில் அமைக்கப்பட்டிருக்கும் ஆலயங்களைத் தீர்வு காணாமல் தோட்ட நிலங்களின் உரிமம் பரிமாற்றம் செய்ய நில உரிமையாளருக்கு அனுமதி வழங்கப்படுகிறது.

8.

இதுவே, ஆலயங்கள் அகற்றப்படுவதற்கும் அல்லது உடைபடுவதற்கும் முக்கிய காரணம் வகிக்கிறது.

9.

இதை தவிர்த்து சாலைகள், வடிகால்கள் மற்றும் கட்டிடங்கள் சட்டம் 1974 பிரிவு 72-இன் கீழ் (Section 72 of Street, Drainage and Building Act 1974) ஊராட்சி அரசின் கட்டிடத் திட்ட அனுமதியின்றி அமைக்கப்பட்ட கட்டிடங்கள் என்ற காரணத்தாலும் ஆலயங்கள் அகற்றப்படுகிறது.

10.

ஆகவே, நடப்பில் இருக்கும் ஆலய நிர்வாகம் தங்கள் ஆலயம் அமைத்திருக்கும் நிலங்களின் உரிமத்தை அறிந்து தக்க நடவடிக்கை எடுப்பது மிக அவசியமாகும்.

11.

இது குறித்து மாநில அரசின் மூலம் நில உரிமையாளர்களை சந்தித்து சுமூகமான முறையில் பேச்சுவார்த்தை நடத்தலாம்.

12.

ஆலயம் அகற்றப்படுவதை/வெளியேற்றத்தை உடனடியாக நிறுத்துவதற்கான ஒரே வழி ஆலய நிலம் பதிவு செய்யப்பட்டுள்ளதா என்பதை உறுதிப்படுத்துவதாகும்.

13.

வரும் முன் காப்போம்.                                       

 

எழுத்து:-

அழகேந்திரா ரமணி

திகதி: 27 ஆகஸ்ட் 2020

No comments: