1. |
மலேசியாவில்
ஆலய பதிவை நிர்வகிக்க குறிப்பிட்ட நேரடி சட்டம் எதுவும் இல்லை. |
2. |
மலேசிய
கூட்டரசு அரசியலமைப்புச் சட்டம் 11-வது விதியின் கீழ் (Article
11 of Federal Constitution) மத சுதந்திரத்திற்கு உத்தரவாதம் அளிக்கப்பட்டுள்ளது. |
3. |
ஆகவே,
மத வழிபாடுகள் நடைபெறும் ஆலயங்களின் பதிவுக்கான சட்ட அவசியம் கூட்டரசு அரசியலமைப்புச்
சட்டத்திலோ அல்லது வேறெந்த எழுதப்பட்ட சட்டத்திலும் குறிப்பிடவில்லை. |
4. |
உண்மை
என்னவென்றால் மலேசியாவில் உள்ள பெரும்பாலான ஆலயங்கள் பல நூற்றாண்டுகள் பழமையானவை
மற்றும் சுதந்திரத்திற்கு முன்பே கட்டப்பட்டவையாகும். |
5. |
பெரும்பாலான
பழமை வாய்ந்த ஆலயங்கள் காலனித்துவ காலத்தில் தோட்ட உரிமையாளர்களின் அனுமதியுடன் அமைக்கப்பட்டவையாகும். |
6. |
இருப்பினும்,
தற்போதைய சூழ்நிலைக்கு ஏற்ப ஆலயங்களின் பதிவு மாநில மாநில அரசாங்கத்தின் மூலம் கட்டாயமாக்கப்பட்டு
வருகிறது. |
7. |
எனவே,
ஆலய பதிவுகளை மாநில அரசு தேசிய நிலக் குறியீடு பிரிவு 62-ன் கீழ்
(Section 62 of National Land Code) மாநில அரசு குறிப்பிட்ட நிலங்களை பொது வசதிகளுக்கான
முஸ்லிம் அல்லாத வழிபாட்டு தலமாக (இந்து ஆலயங்கள்) சட்டப்பூர்வமாக
மலேசியா சங்கப் பதிவாளரால் (ROS) பதிவு பெற்ற இந்து சமய இயக்கங்களின்
(Persatuan
Penganut) பெயரில்
சட்ட அறிவிப்பு (Legal
Notification) மூலம்
அரசிதழ் (gazette) மட்டுமே
செய்யப்படுகிறது. |
8. |
ஆகையால், ஆலய நிலங்களை சட்ட அறிவிப்பு மூலம் அரசிதழ் செய்வதற்கு தேவைப்படும் முக்கிய விண்ணப்பக் கருவியே மலேசியா சங்கப் பதிவாளரால் பதிவு பெற்ற இந்து சமய இயக்கங்கள். எழுத்து:- |
திகதி:
5
ஆகஸ்ட் 2020
No comments:
Post a Comment